OTT இல் வெளியாகும் ‘மாஸ்டர்’ திரைப்படம்?? தயாரிப்பாளர் வட்டத்தில் கசிந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
master
master

இந்த வருடம் முழுவதும் கொரோனாவால் பல தாக்கங்களை சந்தித்து வருகிறோம். மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் திரையரங்குகள் யாவும் மூடப்பட்டிந்தன. இந்நிலையில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அதனை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயின் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியீடா??

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென்று தனி ரசிகர் மன்றமே உள்ளது. தளபதி என்றாலே உயிரை கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும் விஜய் இரண்டு வருடங்களாக தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் விஜய் படம் வெளியீட்டுக்காகவே காத்திருப்பவர்கள் பலர். மெர்சல், பிகில் என திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் 2019 இல் விஜய் நடித்த படம் தான் மாஸ்டர். மாநகரம் படத்தின் இயக்குனரான லோகேஷ் இந்த படத்தை இயக்கி இருந்தார். இதில் அனிருத் இசைமையைத்துள்ளார். மேலும் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி வில்லனாக வேறு நடிக்கிறார். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் காம்போ என்பதால் மக்கள் அனைவரும் இந்த படத்திற்காக காத்திருந்தனர்.

மேலும் இதில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா என பல பிரபலங்களுக்கும் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்திற்கான டீஸர் வெளியானது. இந்த டீஸர் எக்கச்சக்க லைக்ஸ் அள்ளியது என்றே சொல்லலாம். விஜய் படம் என்றால் சும்மாவா?? இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதுவும் இந்த வருட மார்ச் மாதத்தில் தான் நடைபெற்றது. ஜூன் மாதம் இந்த படம் வெளியிடுவதாக இருந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

master movire
master movire

ஆனால் கொரோனா காரணமாக படம் இப்பொழுது வரை நிலுவையில் உள்ளது. விஜயும் இந்த படம் கட்டாயமாக திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்று கூறி விட்டாராம். ஆனால் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 10 ஆம் தேதியே திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் இன்னும் மாஸ்டர் திரைப்படம் பற்றி எந்த தகவலும் இல்லை. தீபாவளியில் சந்தானம் அவர்களின் படம் வெளியானது.

master
master

ஆனால் அந்த அளவிற்கு எந்த ரெஸ்பான்ஸும் அந்த படத்திற்கு இல்லை. ஏனெனில் இது வரையிலும் கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் பயத்தில் தான் உள்ளனர். திரையரங்கிலும் 50 சதவீதம் பேர் தான் அனுமதிக்கப்படுவர். இதனால் நஷ்டமும் ஏற்படலாம். ஜனவரி வரை இந்த தாக்கமே நிகழ்ந்திருந்தால்  திரையரங்கில் வெளியிடுவது சற்று சந்தேகமே என்று தயாரிப்பாளர்கள் கூறுவதாக சில வட்டாரங்கள்  கூறி வருகின்றனர். ஏற்கனவே லோகேஷ் இந்த வதந்திகளை பற்றி கூறியபோது, கண்டிப்பாக திரையரங்கில் தான் இந்த படம் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.

master movire
master movire

இப்படி ஒருபக்கம் இருக்க இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு பெரிய தொகைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திரையரங்குகளில் வெளியிட்ட பின்னே ஓடிடியில் வெளியிடப்படும். இப்படி மாறிமாறி செய்திகள் வெளியாகின்றன. இதனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் எதில் வெளியாகும் என்று தெளிவாக கூறும்படி ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here