பொதுத்தேர்வு மாணவர்களே.., திட்டமிட்டபடி இந்த தேதியில் முடிவுகள் வெளியாகும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஏப்ரல் 26ம் தேதி என அரசு அறிவித்து இருந்தது. இதனால் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 26ம் தேதியுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் – பகுதி 10

மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் உலா வந்த நிலையில் அதற்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது ஏற்கனவே அறிவித்தப்படியே, வரும் மே 6 மற்றும் மே 10 ஆம் தேதிகளில் 12ம் வகுப்பு, 10 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here