கார்த்திகை திருநாளன்று வீட்டில் பூஜை செய்யும் முறை & தீபத்திற்கு உகந்த எண்ணெய்கள் – ஆன்மீக விளக்கம்!!

0

கார்த்திகை திருநாளன்று எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? இந்த கார்த்திகை மாதம் பௌர்ணமியோடு சேர்ந்து வருவதால் மேலும் சிறப்பான மாதமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் எப்பொழுது ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கார்த்திகை திருநாள்:

கார்த்திகை திருநாள் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை நீக்கி இன்பங்களை தரும் நாள். நாம் ஏற்றும் தீபங்களில் துர்க்கை, பார்வதி, சரஸ்வதி, மஹாலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் குடியிருக்கின்றனர். மேலும், தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பகுதியில் விஷ்ணுவும், நெய், எண்ணெய் ஊற்று இடத்தில் சிவனும் குடியிருப்பதாக கூறப்படுகிறது. தீபத்தில் இருந்து வரும் ஒளி நமது தீய சிந்தனைகளை நீக்குகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கார்த்திகை திருநாளன்று பூஜையறையில் சாமி படத்தை மஞ்சள் நீரால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து நறுமண மலர்களை சாமி படத்திற்கு வைக்க வேண்டும். ஒரு வாழை இலையில் மூன்று வகையான பழங்கள், நெவேத்தியம் செய்வதற்கு இனிப்புகள், நிரம்பிய தண்ணீர், வெல்லபாகில் கலந்த பொரி வைத்து 5 முகம் கொண்ட விளக்க ஏற்றி வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.

கேரளா ஸ்டைலில் “நெய் தேங்காய் கருப்பட்டி பணியாரம் ரெசிபி” – கார்த்திகை தீபம் ஸ்பெஷல்!!

நினைத்த காரியம் நடக்க நெய்யால் தீபம் ஏற்றவும். நல்ல எண்ணெயால் தீபம் ஏற்றினால் ஆரோக்கிய குறைபாடு இருக்காது. இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றினால் சகல பாக்கியங்களும் கிட்டும். தேங்காய் எண்ணெயால் விளக்கு ஏற்றினால் அழகு அதிகரிக்கும். புகழ் அதிகரிக்க விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற கூடாது பாவம் அதிகரிக்கும்.

தீபம் ஏற்ற சிறந்த நேரம் மாலை ஐந்து மணி முதல் ஏழு மணிவரை ஆகும். விளக்கு எப்பொழுதும் தானாக அனைய கூடாது. அடிக்கடி பார்த்து எண்ணெய் ஊற்ற வேண்டும் இல்லையெனில் பூ அல்லது பத்தியின் குச்சியை வைத்து விளக்கை குளிர வைக்க வேண்டும். ஒவ்வொரு விளக்கிற்கும் ஒரு சிறப்பு உண்டு. தீபம் ஏற்றும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தீபத்திற்கு ஐந்து அல்லது மூன்று இடங்களில் மஞ்சள், குங்குமம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here