சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!

0

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியில் இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகின்றது. அதே போல் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியும் நிலவி உள்ளது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை அடுத்து இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளது. முக்கிய கட்சியான திமுக தேர்தல் அறிக்கையினை அறிவித்துள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஆளும் கட்சியான அதிமுக கட்சியில் இன்னும் பல இழுபறிகள் இருந்து வருகின்றனர். குறிப்பாக அந்த கட்சியில் இன்னும் இறுதி கட்ட வேட்பாளர்களின் பட்டியலே முடிவு செய்யப்படவில்லை. இதனால் அந்த கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூருக்கு கொரோனா – சோகத்தில் ரசிகர்கள்!!

Tamil Nadu: Power struggle between EPS, OPS heats up in AIADMK ahead of CM candidate announcement - The Week

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அதிமுக கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் 6 பேரின் பெயர்கள் மட்டுமே இருந்தது. அதில்,

  • ஓ.பன்னீர்செல்வம் – போடிநாயக்கனூர்
  • எடப்பாடி பழனிசாமி- எடப்பாடி
  • ஜெயக்குமார் – ராயபுரம்
  • சி.வி.சண்முகம் – விழுப்புரம்
  • எஸ்.பி.சண்முகநாதன் – ஸ்ரீவைகுண்டம்
  • எஸ்.தேன்மொழி – நிலக்கோட்டை (தனி)

இப்படியாக இருக்க இன்று வரை அடுத்த கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இதில் இன்னொரு குழப்பம் என்னவென்றால் கட்சியில் உள்ள சிலர் எங்களது பெயர்கள் இரெண்டாம் கட்ட பட்டியலில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர் செல்வத்திடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Sasikala hospitalised in Bengaluru week before her release from prison | Hindustan Times

இது இப்படியாக இருக்க அடுத்ததாக பழனிசாமி சசிகலா ஆதரவாளர்களின் பக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்து வருகிறாராம். இதனால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here