#INDvsSA பெண்கள் ஒரு நாள் தொடர் – இந்திய அணி அபார வெற்றி!!

0

இன்று இந்திய மற்றும் தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி தங்களது இரண்டாவது ஒரு நாள் தொடரை விளையாடி வருகின்றனர். இதில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா:

இந்திய பெண்கள் மற்றும் தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி போட்டிகளை விளையாடி வருகின்றனர். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணி தற்போது ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். தென் ஆப்ரிக்கா அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தனது விக்கெட்களை இழந்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக லாரா 49 ரன்களை குவித்தார். முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதன்பின்பு இந்திய அணி தனது பேட்டிங்கை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர் ஜெமிமா 9 ஆட்டமிழந்தார். பின்பு ஜோடி சேர்ந்த ஸ்ம்ரிதி மற்றும் பூனம் எதிரணி பந்து வீச்சை சிதறடித்தனர். இருவரும் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் இந்திய அணி 28.4 ஓவர்களில் 160 ரன்களை வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஸ்ம்ரிதி 80 பூனம் 62 ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here