கூட்டணியில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிச்சாமி – அதிருப்தியில் அமித்சா!!

0

தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்குமாறு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது.

தேர்தல் கூட்டணி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுகவை இணைக்க பாஜக முயற்சிகிறது. பாஜகவின் இந்த முயற்சிக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. தற்போதுள்ள அதே கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

இதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணி கட்சியான பாஜக 60 தொகுதிகளை கேட்டு வலியுறுத்தி வருகிறது. மேலும் அமமுகவை, அதிமுக கட்சியில் இணைக்கவும் அதற்கான தொகுதிகளை ஒதுக்கவும் பாஜக நிர்பந்தித்து வருகிறது. இதனை ஏற்று கொள்ளாத அதிமுக தலைவர் பழனிச்சாமி அமமுகவை கூட்டணியில் சேர்க்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவிடம் உறுதியாக கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் செய்த காரியம் – குவியும் வாழ்த்துக்கள்!!

தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில பொறுப்பாளர் முருகன் உட்பட சில கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் பாஜக 60 இடஒதுக்கீடுகளை கேட்டு வலியுறுத்தியுள்ளது. ஆனால் பாஜகவிற்கு 21 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, சசிகலாவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி கூறும்போது, ‘கூட்டணியில் சசிகலாவை சேர்க்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் பாஜகவிற்கு 30 தொகுதிகளை ஒதுக்குகிறோம். வேண்டுமென்றால் அமாமுகவிற்கு உங்கள் தொகுதிகளை பிரித்து கொடுங்கள். ஆனால் தேர்தலில் அமமுக கட்சி பாஜகவின் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். குக்கர் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது’ என நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் பாஜக அதிமுக இடையே தேர்தல் இடஒதுக்கீட்டில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here