குக் வித் கோமாளி புகழ் செய்த காரியம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலம் புகழ் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘குக் வித் கோமாளி’ புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். கடலூரை சொந்த ஊராக கொண்ட புகழ், விஜய் டிவியில் நுழைவதற்கு முன்பு பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சில கெஸ்ட் ரோல்களில் தோன்றியுள்ளார் புகழ்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிகமான பெண் வேடங்களில் நடித்து வந்த புகழுக்கு முக்கியமான அடையாளம் கொடுத்தது ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’ தான். இந்நிகழ்ச்சியில் புகழ் செய்யும் குறும்புத்தனங்களும், நடிப்பும் பார்ப்போரை ரசிக்க வைக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவானார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ் சிலிண்டரின் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தற்போது சின்னத்திரையின் மூலம் வெளித்திரையில் கால் பதித்துள்ளார் புகழ். முன்னதாக நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் இவர். தவிர நடிகர் அஜித் நடிக்கும் மற்றுமொரு படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார் புகழ். மேலும் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் புகழ்.

இந்நிலையில் நடிகர் புகழ் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் அவர் கார் ஓட்டியது போல வெளியான வீடியோக்களும் வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. புகழ் வெளியிட்ட இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here