நடிகர்களாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.. வரலட்சுமியின் ஆவேச பேச்சு வைரல்!! 

0
நடிகர்களாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.. வரலட்சுமியின் ஆவேச பேச்சு வைரல்!! 
தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னணி நடிகரின் மகளாக இருந்தாலும் தனக்கான ஒரு பாணியை உருவாக்கி தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கி வருகிறார். ஆனாலும் இவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது நடிகர்களாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. உலகத்திலேயே மோசமான சம்பளம் பெறுபவர்கள் நடிகர்களாகிய நாங்கள் தான். உங்களுக்கெல்லாம் 1ம் தேதி ஆன சம்பளம் வந்துவிடும். ஆனால் எங்களுக்கு எல்லாம் அப்படி சம்பளம் வராது. எங்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் தான் பணம் கிடைக்கும் என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here