இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி – 60 வயதிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்!!

0
corona vaccine
corona vaccine

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டப்பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள்பட்ட நோய்களையுடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள் பட்ட நோயுடன் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மோடி – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இது குறித்து மத்திய அரசு நடைமுறை விளக்கவுரை ஒன்றை அளித்துள்ளது. அதில் “60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாள் பட்ட நோயுடையவர்கள் தங்கள் வயதுகான சான்றிதழ்களாக, ஆதார் அட்டை , ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஓய்வூதிய அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றினை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “அரசின் எந்த தடுப்பூசி மையத்திற்கு சென்று இலவசமாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் சென்று தடுப்பூசி போட்டு கொள்ள விரும்புபவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்” எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ் சிலிண்டரின் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன மொத்தம் 529 அரசு மையங்களிலும் 761 தனியார் மையங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் தயக்கம் காட்டாது குறிப்பிட்ட மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here