ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0

சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால், மீண்டுமாக மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி தாக்கல்

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை(ஜிஎஸ்டி) வரியின், இந்த ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலகெடு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ள அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதில், வரி செலுத்துவோருக்கு ஏற்பட்ட சிரமங்களினால், கணக்கை தாக்கல் செய்வதற்கான காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மோடி – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

அதன் அடிப்படையில் 2019-20ம் நிதியாண்டிற்கான ஜிஎஸ்டிஆர் 9 மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவங்களை மார்ச் 31ம் தேதி வரை தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு சலுகை, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்வதற்கான தேதி டிசம்பர் 31ம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மீண்டுமாக இந்த தேதி பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுடன் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததால், ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வதற்கான  மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here