ரயில், விமான பயணிகளே., இறந்த சகோதரர் பெயரை வைத்து திருட்டு., திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டெல்லி போலீஸ்!!!

0
ரயில், விமான பயணிகளே., இறந்த சகோதரர் பெயரை வைத்து திருட்டு., திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டெல்லி போலீஸ்!!!

இன்றைய காலகட்டத்தில் புதுவிதமான திருட்டு மோசடி செயல்கள், அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடந்த 19 வருடமாக மறைந்த சகோதரனின் பெயரை வைத்து ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்து, திருட்டு செயல்களில் ஈடுபட்டதாக ராஜேஷ் கபூர் என்பவரை, போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு இருக்கா? வெளியான முக்கிய தகவல்!!!

அதாவது கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மறைந்த சகோதரரின் பெயரை வைத்து ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்துள்ளார். அப்போது வயதான பெண்களை குறி வைத்து, அவர்களிடம் நகைகளை திருடி வந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி திருடப்பட்ட நகைகளை உருக்கி விற்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here