கோலாகலமாக  நடந்த கண்ணன்-பல்லவி  திருமணம்.., பலிகிடாவாகும் பார்வதியின்  வாழ்க்கை.., வீட்டுக்கு  வீடு  வாசல்படி ட்விஸ்ட்!! 

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல்படி சீரியல் ஆரம்பத்திலேயே ட்விஸ்ட்டுடன்  ஸ்டார்ட்டாகி விட்டது. அதாவது, அஜய் திருமணம் நடக்கும் வேளையில் அஞ்சலி விஷத்தை குடிக்க அப்பொழுது வேறு வழியில்லாமல்  அஜய்  மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார். இதனால் திருமணம்  நிற்கும்  சூழ்நிலைக்கு  வருகிறது.

இதனால் பல்லவி குடும்பமே கதறி கொண்டுள்ளது. பல்லவியின்  அப்பா அஜய் அப்பாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். இதனால் ஆத்திரமடையும் பல்லவி  இவர்கள் மீது போலீசில்  கம்பளைண்ட் செய்ய போவதாக சொல்கிறார். இந்த சூழ்நிலையை சரி செய்ய பார்வதி வேறு வழியில்லாமல்  கண்ணனை திருமணம் செய்து வைக்க சம்மதமா என்று  கேட்கிறார்.
இந்த ட்விஸ்டுடன்  சீரியல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த தகவலும்  லீக்காகியுள்ளது. அதாவது, பல்லவி  இந்த குடும்பத்தை பழி  வாங்குவதற்காக கண்ணனை  திருமணம்  செய்ய ஒப்புக்கொள்வாராம். கண்ணனை  பல்லவிக்கு  சுத்தமாக பிடிக்காது என்றாலும் அஜய்யை அனுப்பி  வைத்தது பார்வதி  தான்  என்று  தவறாக நினைத்து கொண்டிருக்கும்  பல்லவி  அவரை பழி  வாங்க  இதெல்லாம் செய்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here