தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ் சிலிண்டரின் விலை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
Gas Cylinder
Gas Cylinder

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த மாதத்திலிருந்து மூன்று முறை விலை உயரத்தப்பட்டு தற்போது ரூ.835 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை ஏற்றத்தினால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்

அதிகரிக்கும் சிலிண்டர் விலை:

கடந்த மாதத்திலிருந்து இதுவரை 3 முறை விலை உயர்த்தப்பட்டு இதுவரை சுமார் 125 ரூபாய் வரை அதிகரித்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்வு மற்றும், அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

indane gas cylinder booking

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் – சிபிசிஐடி வழக்கு பதிவு!!

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா பொருட்களின் விலை உயர்வால் இந்தியாவில் மதத்திற்கொருமுறை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றப்படுகிறது. இது பொதுமக்களை மிகவும் துன்பமடைய செய்து கொண்டிருக்கும் வேளையில் சமீப காலமாக மாதத்திற்கு இருமுறை விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிப்ரவரி 4ம் தேதி ரூ.735 ஆக இருந்த சிலிண்டர் விலை 15ம் தேதி ரூ.785 ஆக உயர்ந்தது. அதே மாதத்தில் மீண்டும் அதன் விலை ரூ.810 ஆக மாற்றம் கண்டது. தற்போது மீண்டும் உயர்த்தப்பட்ட விலையானது சிலிண்டருக்கு ரூ.835 ஆக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து தற்போது மிகவும் அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயரத்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்த விலையேற்றத்தினை கண்டித்து பொதுமக்களும் எதிர்கட்சியினரும் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here