நீட் தேர்வு மாணவர்களே., ரிசல்ட் எப்போன்னு தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
நீட் தேர்வு மாணவர்களே., ரிசல்ட் எப்போன்னு தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்தியாவில் மருத்துவ படிப்பு மேற்கொள்ள நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த வகையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று மே 5 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வர்களின் வசதிக்காக தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நீட் தேர்வை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் சேர்த்து கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேலானோர் எழுதி உள்ளனர்.  இதைத்தொடர்ந்து முடிவுகள் எப்போது வெளிவரும்? என தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here