Saturday, May 11, 2024

அடுத்த 48 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறண்ட வானிலையுடனும், தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம்:

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வட மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் காணப்படும், ஆனால் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிலும், குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்படும்.

தமிழகத்தில் மழைப்பதிவு:

தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

நவம்பர் 23 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், மணிமுத்தாறு பகுதிகளில் 4 செ.மீ., வீரபாண்டி, கோவிலான்குளம், பிளவக்கல், மேல் பவானி பகுதிகளில் குறைந்தபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்பட்டவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -