Thursday, May 16, 2024

பல் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை!!

Must Read

பல் மருத்துவத்திற்காக முதுகலை படிப்பின் சேர்க்கைக்கு வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்று தேசிய கல்வி முகமை தெரிவித்துள்ளது. இளநிலை MBBS படிப்பிற்கான தேர்வுகள் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நீட் தேர்வுகள்:

தேசிய அளவில் மருத்துவ சேர்க்கைக்கான நடைபெறும் தேர்வு தான், நீட். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதிலும், பல மாநில அரசுகளின் எதிர்ப்புகளை மீறி நடைபெற்றது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்த தேர்வுகளுக்கான முடிவுகளும் வெகு விரைவாக கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கூடிய விரைவில் பல் மருத்துவத்திற்கான தேர்வுகள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் தற்போது இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. முதுகலை பல் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தகுதி உடையவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது என்றும், இன்று மாலை 5 மணி முதல் மாணவர்கள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்கலாம்??

இதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இளநிலை பல் மருத்துவம் படித்து இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை 11.55 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • முதலில், https://nbe.edu.in என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் NEET MDS என்று குறிப்பிடப்பட்டிருக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை கிளிக் செய்ததும் விண்ணப்ப படிவத்திற்கான பேஜ் ஓபன் ஆகும்.
  • அதில் New Register என்று குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் சென்று உங்களது விவரங்களை பதிவு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
  • மேலும், ஏதேனும் தகவல்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக உதவி பெற்று கொள்ளலாம்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -