2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரம்., இவ்ளோ பேர் தான்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரம்., இவ்ளோ பேர் தான்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, கடைசியாக மே 13ஆம் தேதி, நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.  இந்நிலையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், இதுவரை 370 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் 45 கோடி வாக்காளர்கள், அதாவது 66.95 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து 49 தொகுதிகளில் வரும் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here