Tuesday, May 7, 2024

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம் – மகிழ்ச்சியில் கோலிவுட், அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Must Read

தமிழ் சினிமா துறையினை பல காலமாக கலங்க வைத்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது தாங்களாகவே தங்களது இணையதளத்தை முடக்கி உள்ளோம் என்பது போல் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இது கோலிவுட் வட்டாரத்தில் உள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“தமிழ் ராக்கர்ஸ்”

தமிழ் சினிமா உலகம் பல இன்னல்களை கடந்து வந்துள்ளது. ஒரு காலகட்டத்தில் திருட்டு விசிடி மூலமாக பல தயாரிப்பாளர்கள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். இதனை பல முயற்சி எடுத்து முறியடித்தனர். இப்படியாக இருக்க “தமிழ் ராக்கர்ஸ்” என்ற புதிய இணையதளம் தமிழ் சினிமாவில் புதிதாக வரும் திரைப்படங்களை அன்றைய நாளிலேயே இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் கதிகலங்க வைத்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இது திரைத்துறையில் உள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு உண்டாக்கியது. இதனை யார் செய்கிறார்கள் ? எந்த திரை அரங்கில் இருந்து படத்தினை பதிவு செய்கின்றனர் என்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. உடனடியாக அன்றைக்கு ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் இணையதளத்தில் வெளி வருவதால் மக்களும் இதற்கு ஆதரவு அளிப்பது போல படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.

தங்காளாகவே அறிவிப்பு:

இதனை தடுக்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கூட போராடி பார்த்தனர். திரைத்துறையினருக்கு நெருக்கடி கொடுக்கும் இந்த இணையதளத்தை முடக்குவேன் என்று கூறி தான் நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார். அவரும் பல தீவிரமான முயற்சிகளை எடுத்து வந்தார். இப்படியாக இருக்க “தமிழ் ராக்கர்ஸ்” இணையதளம் தாங்களே தங்கள் இணையதளத்தை முடக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேசிய அளவு ‘யுஜிசி நெட்’ தேர்வுகள் தள்ளிவைப்பு – என்டிஏ புதிய அறிவிப்பு!!

அவர்களது இணையதளத்தில் “THANKS TO TR FOR HIS WONDERFUL SERVICES FOR A DECADE” என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்த பத்து ஆண்டு காலம் உன்னதமாக சேவையினை வழங்கியதற்காக Tamil Rockersக்கு நன்றி தெரிவித்துள்ளனர். எதற்காக இந்த திடீர் முடிவு?? என்று யாராலும் கண்டுபிடிக்கவில்லை. எது எப்படியோ, திரைத்துறையினர் இந்த செய்தினை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -