Thursday, May 2, 2024

இன்று “மாஸ்டர்” பட டீஸர் ரிலீஸ்?? ‘தளபதி’ ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் காத்திருக்கு!!

Must Read

நடிகர் விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் “மாஸ்டர்” படத்தின் டீஸர் அப்டேட் தீபாவளி சர்ப்ரைசாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பார்க்கும் படம் “மாஸ்டர்”

“தளபதி” விஜய் நடித்து வெளியிட தயாராக இருக்கும் படம் “மாஸ்டர்” இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மோஹனன் நடித்துள்ளார். இந்த படத்தை “கைதி” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட தயாராக இருந்தது. ஆனால், கொரோனா பொது முடக்கம் காரணமாக படம் வெளியிடப்படாமல் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைத்து ரசிகர்களும் கவலை அடைந்தனர். பொது முடக்கத்தின் போது சில படங்கள் ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியான போது “மாஸ்டர்” படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என்று அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. ஆனால், இதனை படக்குழுவினர் திட்டவட்டமாக மறுத்தனர்.

திரையரங்குகள் திறக்கப்பட்டதும் படம் திரையரங்கில் ரசிகர்களின் ஆரவார கோஷத்துடன் தான் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

லேட்டஸ்ட் அப்டேட்!!

கடைசியாக, “மாஸ்டர்” படத்தில் நடிகர் விஜய் பார்வையற்றவராக நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியானது. இப்படியாக இருக்க தமிழக அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக தீபாவளிக்கு “மாஸ்டர்” படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படாத நிலையில் படம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் Finally! The MASTER arrives..!! என்று கேப்ஷன் செய்துள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில் update loading என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

கடைசியாக இன்று மாலை 6 மணிக்கு என்றும் கூறப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக “மாஸ்டர்” படத்தின் டீஸராக தான் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு படக்குழுவினர் சார்பில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -