சூப்பரான ‘மட்டன் கைமா’ ரெசிபி – தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க!!

0

அசைவ உணவு பிரியர்களுக்கு மட்டன் என்றால் எப்போதும் ஒரே மாதிரியான பிரியாணி, சாப்ஸ் போன்ற உணவு வகைகள் தான் நினைவுக்கு வரும். இந்த மாதிரியான வகைகளை செய்வதற்கு பதிலாக மட்டனை வைத்து கைமா மசாலா செய்வது மிகவும் சுலபமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம்னு தாங்க பார்க்க போறோம்.

தேவையான பொருள்கள்

மட்டன் – ½ கி (எலும்பில்லாதது)

மட்டன் கொழுப்பு – 100 கி

வெள்ளை கோஸ் – அரை கோஸ்

வேகவைத்த பச்சை பட்டாணி – 1 கைப்பிடி

வரமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

உப்புத்தூள் – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2

கொத்தமல்லி – கொஞ்சம் (பொடியாக நறுக்கிறது)

கறிவேப்பிலை – 1 கொத்து

கடலெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

தேங்காய் பால் – 1 கப்

மசாலா அரைக்க

சின்ன வெங்காயம் – 5

தேங்காய் – சிறிது

தக்காளி – 2

பட்டை – 1

கிராம்பு – 2

அண்ணாச்சி பூ- 1

முந்திரி பருப்பு – 10

பச்சை மிளகாய் – 4

மிளகு – 1 தேக்கரண்டி

சோம்பு – ½ தேக்கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மட்டன் கொழுப்பை போட்டு நன்றாக வதக்கி கொண்டு அதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து தேங்காய் பாலை பிழிந்து 1 கப் அளவு பால் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்து கொண்ட பிறகு ஒரு கடாயில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொண்டு அதில் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அதில் கொத்துக்கறியை சேர்த்து எல்லா பொருள்களும் சேரும் அளவுக்கு வதக்கிய பிறகு வதக்கி வைத்த மட்டன் கொழுப்பை சேர்க்கவும். அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிறிதாக வைத்து 10 நிமிடங்கள் வரை மூடிய படி கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விட்ட பிறகு அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அதன் பிறகு வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு பிறகு கறி குழம்பு கிரேவி பதத்திற்கு வந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலையும் சேர்த்து பிறகு அடுப்பை சிறுதீயில் வைத்து நன்றாக சுருள வதக்கி கொண்டு அதில் கொஞ்ச கொஞ்சமாக மரச்செக்கு கடலெண்ணய் சுற்றி ஊற்றி நன்றாக சுருள கிளறிய கொள்ள வேண்டும். அதன் பின்னர் உப்பு, காரம், சரி பார்த்த பிறகு குழம்பு கெட்டி பதத்திற்கு வந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அனைக்கவும். இப்பொழுது சுவையான மட்டன் கைமா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here