Tuesday, April 30, 2024

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

Must Read

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏனைய மாவட்டங்களில் லேசாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தொடர்ச்சியான கனமழை:

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை அறிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று (12/11/2020) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு (13/11/2020) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடைவெளிவிட்டு மழை தொடர்ச்சியாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழைப்பதிவு:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அண்ணா பல்கலை வளாகம், ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதிகளில் அதிகபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர், நாகப்பட்டினம் மாவட்டத்தினுள் உள்ள மயிலாடுதுறை, ஆலந்தூர், சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

குறைந்தபட்சமாக வலக்கைமான், பெரம்பலூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் குறைந்தபட்சமாக 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு வானிலை மையம் சார்பில் எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பொதுத்தேர்வு மாணவர்களே.., திட்டமிட்டபடி இந்த தேதியில் முடிவுகள் வெளியாகும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஏப்ரல் 26ம் தேதி என அரசு அறிவித்து இருந்தது. இதனால் பிளஸ் 2, பிளஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -