Thursday, May 2, 2024

எல்லையில் சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கி – பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார்..!

Must Read

இந்திய ராணுவம் தனது ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்ட டி-90 பீஷ்மா பீரங்கியை லடாக் எல்லை பகுதியில் நகர்த்தி உள்ளது.

லடாக் பிரச்னை:

கடந்த மே மாதத்தில் இருந்து சீன ராணுவம் நம் ராணுவத்திடம் வாலாட்டி வந்தது. தேவை இல்லாமல் நம்மிடம் பல பிரச்சனைகளை உருவாக்கி வந்தது சீன ராணுவம். இதன் உச்சமாக கடந்த 15 ஆம் தேதி நமது வீரர்களிடம் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் நாட்டில் பலரும் கொந்தளிப்பில் இருந்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

india china ladakh problem
india china ladakh problem

இந்த மோதல் குறித்து இரு நாட்டு தளபதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் சமாதான கொடியை சீன அரசு பறக்க விட்டது. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்த நிலையிலும் சீன ராணுவம் நமது வீரர்களை அச்சுறுத்தும் விதமாக அவர்களின் போர் ஆயுதங்களை நிறுத்தி வருகிறது, செயற்கை கோள் மூலமாக தெரியவந்து உள்ளது.

Ladakh Border
Ladakh Border

போன முறை போல் அல்லாமல் நமது ராணுவமும் மோதலுக்கு தயாராக உள்ளது. அவர்களுக்கு இணையாக நமது போர் கருவிகள், பீரங்கிகளை நிறுத்தி வருகிறது.

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுமா..? – அமைச்சர் பதில்..!

டி-90 பீஷ்மா:

இந்த பனி போரின் உச்சமாக இந்திய ராணுவம் தனது சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா என்ற பீரங்கியை நிறுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திடம் இந்த பீரங்கி 4,000 உள்ளது என்பதும், சீன ராணுவத்திடம் இது போன்ற பீரங்கி 3,500 தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

t-90 bhisma tank
t-90 bhisma tank

சிறப்பு அம்சங்கள்:

  • தயாரிக்கபட்டது:    ரஷ்யா
  • எடை : 48 டன்
  • விசை : 1000 குதிரை விசை ஆற்றல் கொண்டது.
  • துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்த வல்லது.
  • ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளை பொழியும் ஆற்றல் பெற்றது.
  • ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்டது.
  • 6 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி இருந்தாலும் தாக்க வல்லது.   இதன் மூலம் இந்திய ராணுவம் சீன ராணுவத்திற்கு எதிராக தாக்க தயாராக உள்ளது தெரிகிறது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வாகன ஓட்டிகளே., நாள் ஒன்றுக்கு பெட்ரோல், டீசல் இவ்ளோ தான் லிமிட்? கட்டுப்பாடுகளை விதித்த திரிபுரா அரசு!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பணிகளுக்கும் இருசக்கர உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அசாமில் ஜதிங்கா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் திரிபுராவுக்கு செல்லும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -