பாத்திமா ரெஹானா மீது போலீசார் வழக்குப்பதிவு – அரை நிர்வாண வீடியோ வைரல்..!

0

அரை நிர்வாண உடம்பில் குழந்தைகள் ஓவியம் வரைவது போல் வீடியோ வெளியிட்ட பாத்திமா ரெஹானா மீதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரை நிர்வாண உடம்பில் வீடியோ..!

ரெஹானா பாத்திமா ஜூன் 19 அன்று அரை நிர்வாண நிலையில் பாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல் விடியோவை யூடியூப் வீடியோவை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன் ‘பாடி அண்டு பாலிடிக்ஸ்’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு இருந்தது.

இது தற்போது சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான் அழகு பார்ப்பவரின் கண்ணில் இருப்பது போலவே பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

மனநல டாக்டர் சி.ஜே. ஜான்..!

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கலை தொடர்புகளில் எந்தவிதமான ஆபாசத்தையும் காணவில்லை. இது ஒரு தனிப்பட்ட நபர் சம்பந்தமாக இருந்தால் பரவாயில்லை.

ஆனால் அதைப் படமாக்கி பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொதுவெளியில் விடும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்திடாத பருவத்தில் இது போன்று செயல்பட வைப்பது குற்றத்தன்மையுடையாகி விடுகிறது என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here