பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுமா..? – அமைச்சர் பதில்..!

0

தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

துணைவேந்தர் தலைமையில் குழு..!

அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டதில் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் ஈடுபாடு காட்டாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வு நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.

KP Anbalagan
KP Anbalagan

இந்த பரிந்துரைகளை ஆலோசித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் இன்னும் இறுதி செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது..,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அதைப்பற்றி ஆலோசித்து வருவதாகவும் இதில் முடிவு எடுக்க கவர்னர், முதல் அமைச்சரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here