எம்.பி, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்., சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்ட தகவல்!!!

0
எம்.பி, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்., சிறப்பு புலனாய்வு குழு வெளியிட்ட தகவல்!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான தகாத வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய பெண்கள் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி எஸ்.பி. உட்பட 18 போலீசார் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை, கர்நாடக அரசு நியமித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் முன்னாள் மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவருக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர், சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தள (ம.ஜ.த.) கட்சியின் எம்.பி. பதவியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தலைவர் குமாரசாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50 வினாக்கள் | 50 MCQ’s Important General Tamil Questions

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here