உழைப்பாளர் தினம்.. விஜய் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வாழ்த்து.. முழு விவரம் உள்ளே!!

0
உழைப்பாளர் தினம்.. விஜய் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வாழ்த்து.. முழு விவரம் உள்ளே!!
உலகெங்கும் உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இன்று (மே 1) ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குருதியை வியர்வை ஆக்கிய உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay- இல் வாழ்த்திப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.  இவரைத் தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறைசாற்றும் இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம் என்று கூறிஉள்ளார்.

இதேபோல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  தமக கட்சித் தலைவர் ஜிகே வாசன், பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் வீரமணி, உள்ளிட்ட பலரும்  பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here