Saturday, May 18, 2024

ஸ்பைசியான சிக்கன் நூடுல்ஸ் – வீட்ல செஞ்சு அசத்துங்க..!!

Must Read

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது அசைவமான “சிக்கன்”. அதனுடன் கூடுதலாக நூடுல்ஸ் இருந்தால் செம்ம ருசி தான். வீட்டின் லிட்டில் பிரின்சஸ், ஸ்பெஷல் அண்ட் ஈஸியான செய்முறை இதோ.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 200 கிராம்
  • நூடுல்ஸ் – 300 கிராம்
  • வெங்காயம் – 2
  • மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி – 1 அல்லது 2
  • பூண்டு – 3 பல்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி – 2
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் – கொஞ்சமாக (வாசனைக்கு)

செய்முறை:

  • முதலில் நூடுல்ஸ்சை கொதிக்க விட்டு தனியாக எடுத்து கொள்ளவும். நூடுல்ஸ் ஒட்டாமல் வர சிறிது எண்ணெய் விட்டு கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவை அனைத்தையும் நன்றா அரைத்து கொள்ளவும்.
  • பிறகு, ஒரு வானொலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வாய்த்த வெங்காயம், தக்காளியை வதக்கவும். முதலில் வெங்காயம் அதன் பின் தக்காளி போட்டு வதக்கவும். நன்றா வதங்கியவுடன் நாம் அரைத்து வைத்த கலவையை போட்டு கிண்டவும்.
Chicken Noodles
Chicken Noodles
  • இந்த கலவை நன்றாக வதங்கும் போது பச்சை வாடை போனதும்,தனி மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும். பின், சிக்கனை போட்டு நன்றாக கிளறவும்.
  • சிறிது நேரத்திற்கு பிறகு, நூடுல்ஸ்யையும் போட்டு வதக்கவும், வேண்டுமெனில் சாஸ் கூட நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.
  • முடிக்கும் போது சிறிது கொத்தமல்லியை தூவி பரிமாறுங்கள்.

லிட்டில் பிரின்சஸ் ஆன உங்கள் சமையலை கிண்டல் செய்யும் உங்கள் அம்மா கூட மூக்கில் விரல் வைப்பார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -