Tuesday, April 30, 2024

மீந்து போன இடியாப்பத்தை வைத்து “சிக்கன் கொத்து இடியாப்பம்” – செஞ்சு பாருங்க!!

Must Read

எப்பவும் ஒரே மாதிரி தான் டிபன் சாப்பிட வேண்டுமா என்ன?? புதுசா வித்தியாசமான ரெசிபி ட்ரை பண்ணி பாக்க போறோம் இன்னைக்கு. அந்த ரெசிபி “சிக்கன் கொத்து இடியாப்பம்” இதோ..

தேவையான பொருட்கள்:

  • இடியாப்பம் – 2
  • சிக்கன் துண்டுகள் – 100 கிராம்
  • சிக்கன் கிரேவி – 1/4 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • முட்டை – 2
  • பச்சை மிளகாய் – 1
  • மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை – கொஞ்சமாக
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

delicious view of "chicken kothu idiyappam"
delicious view of “chicken kothu idiyappam”
  • முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, காய வைக்கவும்.
  • பின் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும், வதங்கியதும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். இதில் பச்சை மிளகாய் மஞ்சள் தூள், மிளகாய் துள்ள போட்டு நன்றாக கிளறவும்.
  • இது நன்றாக வதங்கியதும், முட்டையை சேர்த்து கிளறவும்.
  • இந்த கலவை வதங்கியதும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, அதில் சிக்கன் கிராவியையும் ஊற்றி கிளறவும்.(சிக்கன் துண்டுகள் சிறிதாக இருப்பது சிறப்பு)
  • இது கொஞ்சம் வதங்கியதும், இடியாப்பத்தை உதுத்து இந்த கலவையில் சேர்க்கவும். நன்றாக மசாலா படும்படி கிண்ட வேண்டும்.
    ஈஸியான மற்றும் சுவையான “சிக்கன் கொத்து இடியாப்பம்” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -