6 மாதம் பணத்தை எடுக்காவிட்டாலும் ஓய்வூதியம் நிறுத்தப்படாது – தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

0
pension

தமிழகத்தில் ஓய்வூதிய பணம் செலுத்தப்பட்டு 6 மாத காலம் அதனை வங்கிக்கணக்கில் இருந்து எடுக்காவிட்டாலும் அல்லது பரிவர்த்தனை மேற்கொள்ளா விட்டாலும் அந்த கணக்குகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என கருவூலத்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் அதற்கு மாற்றாக புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது.

ஓய்வூதியம் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி செயல்பாடுகளில் பெரிய தொய்வு நிலவுகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதன் பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் நிலவுகிறது. இந்நிலையில் ஓய்வூதிய பணத்தை 6 மாத காலத்திற்கு மேல் எடுக்காத கணக்குகளுக்கு பணம் செலுத்துவது நிறுத்தப்படும் என தமிழக கருவூலத்துறை அறிவித்து இருந்தது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா பாதிப்பால் வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பதில் சிக்கல்கள் நிலவுவதால் உத்தரவை திரும்பப்பெற கோரப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

pension
pension

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் தமிழக சுங்கத்துறை ஆணையர் சமயமூர்த்தி அவர்கள் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிவிப்பில் 6 மாத காலம் செயல்பாடின்றி இருக்கும் வங்கிக்கணக்குளை முடக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் 6 மாத காலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாவிட்டாலும் ஓய்வூதியம் தொடர்ந்து செலுத்தப்படும், கணக்குகள் முடக்கப்படாது என கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here