நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!

0

மஹாராஷ்டிரா மாநில அரசின் உத்தரவின்படி, பயணிகளுக்கு இ-பாஸ் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுபோக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப்போக்குவரத்து தொடக்கம்:

மகாராஷ்டிரா அரசு மாநில போக்குவரத்து கழகத்தின் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்.எஸ்.ஆர்.டி.சி) மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கங்கள் நிறுத்தப்பட்டன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

“மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதித்துள்ளது, ஆகஸ்ட் 20 முதல் சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்று எம்.எஸ்.ஆர்.டி.சியின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சேகர் சன்னே தெரிவித்து உள்ளார்.

மாநில அரசின் உத்தரவின்படி, பயணிகளுக்கு எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் இ-பாஸ் அனுமதி அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை. ஆனால் போக்குவரத்து நிறுவனம் அத்தகைய பயணங்களுக்கு விதிமுறைகளை நிர்ணயித்து உள்ளது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும்!!

18,000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் கொண்ட எம்.எஸ்.ஆர்.டி.சி மிகப்பெரிய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களில் ஒன்றாகும். கொரோனா பரவலுக்கு முன்பு, எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் தினமும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here