Friday, May 17, 2024

இந்தியாவில் விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள் – என்னென்ன கட்டுப்பாடுகள்??

Must Read

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக மக்கள் அதிகமாக சென்று வரும் இடங்களான மால்கள், கோவில்கள், திரையரங்குகள், உணவகங்கள் என்று அனைத்து இடங்களும் திறக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

cinema theatres
cinema theatres

இப்படியான நிலை இருக்க தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறைத்து வருகிறது மேலும் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். இதனால், அடுத்த மாதத்தில் இருந்து மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி திறக்க அனுமதி கொடுக்கப்பட்டாலும், அதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன என்ன கட்டுப்பாடுகள்?

  • குறைந்துபட்சம் 3 சீட் இடைவெளி இருக்க வேண்டும்.
  • அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  • சானிடைசரை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
  • ஸ்மார்ட்போன் மூலமாக தான் டிக்கெட் விநியோகிக்க வேண்டும்.
  • ஒரு காட்சி முடிந்ததும் கிருமி நாசினி கொண்டு திரையரங்கை சுத்தம் செய்ய வேண்டும்.
  • திரையரங்கில் மூன்றில் ஒரு பங்கு பார்வையாளர்களை தான் திரைப்படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் வழக்குகள் 12% அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் அறிக்கை!!

இன்னும் பல கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது திரையரங்களுக்கு மட்டும் தான் பொருந்தும், பல திரைகளை கொண்ட மால்களுக்கு பொருந்தாது என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் மேலும் சில கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

செவ்வாய் கிரகத்தில் ரோவர் & ஹெலிகாப்டரை தரையிறக்கும் திட்டம்? இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான் 3' விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -