தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன். தற்போது இவர், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை மாதம் 12ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் கதை குறித்து ஓர் முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் மற்றும் அநியாயங்களை கேள்விப்பட்டு ஹாங் ஹாங்கில் இருக்கும் ‘சேனாபதி’ கமல் ஹாசன் இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். அவருடைய வருகையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் இங்கு நடந்தது என்பதே இப்படத்தின் கதை களம் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.