பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.. விஜய்யின் X தள பதிவு வைரல்!!

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். 30 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் கதாநாயகனாக இருக்கும் இவர் கடந்த (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை ஒட்டி நடிகர் விஜய்க்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

vjஇந்த நிலையில், நடிகர் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here