Sunday, May 5, 2024

‘அதிமுக கிளைச் செயலாளர் முதல் முதல்வர் அரியணை வரை’ – எடப்பாடி பழனிசாமியின் வெற்றிப்பயணம்!!

Must Read

இன்று அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக பல தொண்டுகளை செய்துள்ளார். அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை. அவர் கடந்த வந்த பாதையினை பற்றி பார்ப்போம். அதிமுக கிளைச் செயலாளரில் தொடங்கி தற்போது முதல்வர் அரியணை ஏறியுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் வெற்றிப் பயணத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் எப்படி:

பெரிய ஆலமரம் வளர்கிறது என்றால் அது முதலில் ஒரு சிறு விதையாக தான் இருந்திருக்கும். அதே போல் தான் பழனிசாமி அதிமுக கட்சியில் இணைந்தார். முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு அதிமுக.,வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். பிறகு, எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள சிலுவம்பாளையம் கிளை கழக செயலாளராக பொறுப்பேற்றார். அவர் கட்சி சார்பில் வகித்த முதல் பதவி இது தான்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

palanisamy with mgr and jeyalalitha
palanisamy with mgr and jeyalalitha

இதற்கு பின் அவர் அதிமுகவின் தலைவரான ஜெயலலிதாவை தனது வித்தியாசமான முறையால் ஈர்த்தார். அதில் குறிப்பிடப்படும் ஒன்று, எடப்பாடி ஒன்றியம் முழுவதும் ஜெயலலிதா பெயரில் கம்பங்கள் அமைத்தது. இதற்கு அடுத்ததாக 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் எடப்பாடியில் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக மாறினார்.

நீண்ட நெடிய போராட்டம்:

இதற்கு பின்பு தான் அவரது பெயருக்கு பின் எடப்பாடி என்று அடைமொழி உருவானது. அதன் பின் படிப்படியாக நாடாளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் என்று பதவி வகித்து, பின் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்தார்.

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று?? வெளியான தகவல் உண்மையா??

அதன் பின், ஜெயலலிதா மறைவினை அடுத்து கட்சியில் பல களேபரங்கள் நடந்தன. 2017 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக மாறினார். தற்போது வரும் மே மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -