அண்ணா பல்கலைக்கழக மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வுகள்? அட்டவணை வெளியீடு!!!

0
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வுகள்? அட்டவணை வெளியீடு!!!
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு,ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடப்பது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால், செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு, செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வருகிற 15ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். அது தொடர்பான முழு விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here