சென்னை எழும்பூர் to குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0
சென்னை எழும்பூர் to குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பயணிகள் பலரும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக குருவாயூர் சென்றடைகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற 9 மற்றும் 11ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில் (வ.எண்:16127)  இருந்து காலை 09.45 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் வழியாக குருவாயூர் சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக 9ஆம் தேதி மட்டும் குருவாயூரிலிருந்து (வ.எண்:16128) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும் என தெரிவித்துள்ளனர். அப்போது சங்கனாச்சேரி திருவல்லா மற்றும் செங்கனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here