Monday, May 6, 2024

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று?? வெளியான தகவல் உண்மையா??

Must Read

திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அது உண்மை தகவல் இல்லை, சில விஷம நெட்டிசன்கள் இதனை பரப்பி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின்:

திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது தலைமையில் திருவள்ளுர் மாவட்டத்திற்கு அருகே உள்ள பூந்தமல்லி பகுதிக்கு அடுத்து உள்ள புதுசத்திரம் பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 200 பேர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கொரோனா கால தடை உத்தரவை மீறியதற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனை தொடர்ந்து 200 பேருக்கும் அதிகமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது என்று பிரபல செய்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது போல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு பின் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தான் உண்மை.

fake news
fake news

தவறான சித்தரிப்பு:

இந்த செய்திகளை தான் சிலர் தவறாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். பிரபல தொலைக்காட்சி தாங்கள் வெளியிட்ட செய்தி போலியானது என்று கூறினர். இதன் மூலமாக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. நெட்டிசன்கள் உண்மையினை அறிந்து செய்திகளை பரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -