ஒரே மாதத்தில் அடர்த்தியான கூந்தலை பெற மூலிகை எண்ணெய் – ட்ரை பண்ணி பாருங்க!!

0
hair growth
hair growth

இந்த அவசர காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் உள்ள பெரிய பிரச்சனை முடி உதிர்தல் தான். சரிவர முடியை பராமரிக்காதது தான் இதன் காரணம்.  இப்பொழுது முடியின் அடர்த்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி அடர்த்தியாக வளர??

இரும்பு சத்துக்கள் குறைபாடு இருந்தால் முடி வலுவிழந்து காணப்படும். மேலும் அதிகமாக கொட்டவும் செய்யும். இதனால் இரும்பு சத்துக்கள் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து வர வேண்டும். ஏனெனில் தலையில் எண்ணெய் பசை இல்லாமல் வறட்சியாக இருந்தால் முடி உதிர்வு ஏற்படும்.

hair fall
hair fall

வீட்டில் இருக்கும் நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து இறுக்கமாக சடை பின்னி கொண்டால் முடி வலுப்படும். அந்த காலத்தில் சடை பின்னுவதற்கு காரணமே முடி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டத்திலோ நாம் முடிகளை ஸ்டைல் என்ற பெயரில் பின்னுவதே இல்லை. இப்பொழுது முடி அடர்த்தியாக வளர எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

Hair-Spa
Hair-Spa

நெல்லிக்காய் – 2

செம்பருத்தி – 2

கரிசிலாங்கண்ணி – ஒரு கையளவு

பொன்னாங்கண்ணி – ஒரு கையளவு

மருதாணி – ஒரு கையளவு

தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை

முதலில் அரை லிட்டர் எண்ணெயை கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் காய்ச்சவும். பொன்னாங்கண்ணி இலையை போடவும். நன்கு பொரிந்து அடங்கிய பிறகு நெல்லிக்காயை சிறிதாக நறுக்கி அதில் சேர்க்கவும். அதன் பிறகு மருதாணி இலை, செம்பருத்தி, பொன்னாங்கண்ணி இலையை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து அதில் சேர்க்கவும்.

hair oil
hair oil

மிதமான சூட்டில் காயவைக்க வேண்டும். இப்பொழுது அந்த எண்ணெயை இறக்கி ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி அதனை அரை மணி நேரம் சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதனை தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here