Monday, May 6, 2024

அஜித் “வலிமை” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – லீக் ஆன புகைப்படத்தால் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Must Read

தல” அஜித் நடிக்கும் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தகவல்களுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியாக அமைந்துள்ளது.

வலிமை” திரைப்பட கூட்டணி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான “தல” அஜித்தின் 50 வது திரைப்படம் தான், வலிமை. இந்த படத்தினை தமிழில் “சதுரங்க வேட்டை“, “தீரன் அதிகாரம் ஒன்று” மற்றும் “நேர்கொண்ட பார்வை” போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஹச்.வினோத் இயக்கி வருகிறார். அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெற்றி படமாக அமைத்ததால் இந்த கூட்டணி மீண்டும் “வலிமை” படத்தில் இணைத்துள்ளனர். இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளது. அனைத்து நடிகர்களின் படங்கள் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றது. ஆனால், அஜித்தின் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவே இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் படக்குழுவினர் மீது செம கோபத்தில் இருந்து வந்தனர்.

இது குறித்து சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தும் வந்தனர். தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இது தான் காரணமா?? ஆர்டிஓ 16 பக்க விசாரணை அறிக்கை!!

வலிமை” படத்தில் அஜித் ஈஸ்வர மூர்த்தி என்ற காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பாடல் இருக்கிறது என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இப்படியான நிலையில் இந்த படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிகை சுமித்ரா நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அஜித் படங்களில் குடும்ப உறவுகள் குறித்த முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு தான் காட்சிகள் அமையும். அதே போல் இந்த படத்திலும் அதே போல் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -