Saturday, May 25, 2024

‘முன்பதிவு செய்யாமல் கோவிலுக்குள் வர வேண்டாம்’ – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு!!

Must Read

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் ஒரு கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் தற்போது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் வரும்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் அறிக்கை:

உலகத்தைய அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சபரிமலை மண்டல பூஜை சீசன் என்பதால் மக்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரளா அரசு மற்றும் கோவில் தேவஸ்தானம் இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கோவிலுக்கு செல்லும் அனைவரும் 24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் 10 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கும் அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.

தேவசத்தானம் போர்டு அறிவிப்பு:

தற்போது ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கபடுவர். முன்பதிவு செய்யாதோர் வர வேண்டாம் என அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் முன் பதிவு செய்யாத பக்தர்களும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். முன்பதிவு செய்த பக்தர்களுடனும் தனியாகவும் வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சபரிமலைக்கு படையெடுக்கின்றனர்.

“பலச மறக்க கூடாதுல” – சாலையோர சிக்கன் கடை நடத்தும் யார்கர் நடராஜனின் தாயார்!!

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் முன்பதிவு ஆவணங்கள் நிலக்கல்லில் போலீசாரால் சரிபார்க்கபடுகின்றன. அப்போது முன்பதிவு அனுமதி இல்லாமல் வரக் கூடிய பக்தர்களை சபரிமலைக்கு செல்ல போலீசார் அனுமதிப்பது இல்லை. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை என திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

இது தொடர்பாக, தேவஸ்தான தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம். அவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி கிடையாது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சிக்கிக்கொள்ள போகும்  மனோஜ்-ரோகினி.., வண்டவாளம்  தண்டவாளம்  ஏறும்  தருணம்.., சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்!! 

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் இப்பொழுது பைனான்ஸ் ரீதியாக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள  நிலையில் விஜயா தனது மகனுக்கு பொறுப்பு வந்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -