Thursday, May 2, 2024

குட்டீஸ்களை குஷி படுத்தும் சாக்லேட் கேக் – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!!

Must Read

எல்லா வயதில் உள்ள ரசிகர்களையும் தன் வசம் வைத்திருக்கும் ஒரே ஸ்பெஷல் கேக் -க்கு மட்டும் தாங்க இருக்கு. அதுலயும் சாக்லேட் கேக்ன்னா குழந்தைகளோட சந்தோசத்திற்கு அளவே இருக்காது. அப்புறம் கேக் ல முட்டை சேர்க்குறதுனால வெஜிடேரியன்கள் சாப்பிட மாட்டாங்க. ஆன இந்த கேக்ல முட்டை சேர்க்க போறது இல்ல. அதனால வெஜிடேரியன்களும் சாப்பிடலாம். ஒரே கேக் பேன் மட்டும் போதும். நம்ம வீட்ல இருக்குற குட்டீஸ்களுக்கு இந்த கிறிஸ்துமஸ்க்கு “சாக்லேட் கேக் ” செஞ்சு குடுத்து அசத்துங்க. எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • மைதா – 1 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • கொக்கோ பவுடர் – 1/2 கப்
  • வெஜிடபிள் எண்ணெய் – 1/3 கப்
  • வெதுவெதுப்பான தண்ணீர் – 1 கப்
  • ஒயிட் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணிலா எசன்ஸ் – 1 டீ ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – 1 டீ ஸ்பூன்
  • உப்பு – 1 பின்ச்
  • டார்க் சாக்லேட் சிப்ஸ் – 1/2 கப்

செய்முறை:

முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸ்க்கு சூடு படுத்திக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பேனில் மைதா, கொக்கோ பவுடர், சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு இவற்றை சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும். பிறகு கரண்டியைக் கொண்டு அந்த மாவில் மூன்று இடங்களில் இடைவெளியை ஏற்படுத்தவும். இப்பொழுது அந்த இடைவெளியில் ஒன்றில் வெதுவெதுப்பான தண்ணீரையும், ஒன்றில் வினீகரையும், ஒன்றில் வெண்ணிலா எசன்ஸையும் ஊற்றி மாவு மிருதுவாகும் வரை கலந்து விடவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போது அதில் சாக்லேட் சிப்ஸ் ஐ சேர்த்து ஓவனில் 35 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை வேக விடவும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்து ஆறிய பின்பு பரிமாற வேண்டும். மேலே சிறிது சாக்லேட் சாஸ் சேர்த்து கொடுத்தால் குட்டீஸ் ரொம்ப ஜாலி ஆயிருவாங்க. ரொம்ப சிம்பிளான முறையில ரொம்ப டேஸ்ட்டான “சாக்லேட் கேக்” செஞ்சு உங்க குழந்தைகளை குஷி படுத்துங்க.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -