“பலச மறக்க கூடாதுல” – சாலையோர சிக்கன் கடை நடத்தும் யார்கர் நடராஜனின் தாயார்!!

0

கிரிக்கெட்டில் உலகையே தனது அசத்தல் பவுலிங்கால் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடராஜன். அவரை போலவே அவரது தாயும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். நடராஜனின் தாய் இன்றும் அவரது சுயத்தொழிலான சில்லி சிக்கன் கடையை நடத்துகிறார்.

சில்லி சிக்கன் கடை நடத்தும் நடராஜனின் தாய்:

கிரிக்கெட் என்றாலே பொதுவாக மக்கள் அனைவரும் விரும்பி பார்ப்பார். மக்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்றே கூறலாம். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் கிரிக்கெட் டீமில் ஒருவராக என்றால் சொல்லவா வேண்டும்! தற்போது கிரிக்கெட் உலகில் முன்னிலையில் இருப்பவர் கிரிக்கெட்டர் நடராஜன். இவர் பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாக இருப்பர். தமிழ்நாட்டின் முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் பிறந்தவர் நடராஜன். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர். இவர் தந்தை தங்கராசு ஒரு நெசவு தொழிலாளி, தயார் சாந்தா சாலையோர சிக்கன் கடை நடத்துபவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலக்கினார் நடராஜன். அதை கண்டுகளித்த நடராஜனின் தயார் சாந்தா எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சின்னப்பம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு எதிரே சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்டபோது, மகன் எவ்வளவு சம்பாதித்து அனுப்பினாலும் என்னால் முடிந்தவரை நான் கடையை நடத்துவேன் என்றார்.

‘நீங்க அப்பாவாக போறீங்க மாமா’ – கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லிவிடும் தனம்!!

மேலும் அவர், “பலச மறக்கக்கூடாதுல அப்பயெல்லாம் இந்த கடைதான் சோறு போட்டு நம்பள காப்பதுச்சு ஐபிஎல் விளையாடும் போதே சொல்லுச்சு இந்த கடை வேணாமுன்னு நான் தான் கேக்கல. 2மணி நேரந்தானே வீட்டுலயே எவ்வளவு நேரந்தான் இருக்குறது, வெளியில வந்து நாலு ஜனங்களை பார்தாதானே மனசு நல்லா இருக்கும், உடம்பு நல்லா இருக்கும். இன்னுமே நெறைய புள்ளைங்க வந்து பழைய கடைய விட்டுராதீங்க நாங்க எங்க போவோம் உங்களுக்கு என்ன வயசாகிப்போச்சு, இன்னும் கொஞ்ச நாளைக்கு போடுங்கனு சொல்ராங்க அதான் மகள்கள் கலியாணம் முடிஞ்ச பிறகு விட்டுடலானு இருக்கேன்” என்றார்.

கிரிக்கெட் மைதானத்தில் சாந்தமாக இருக்கும் நடராஜன் போலவே அவரது தயார் எளிமையாக இருக்கிறார். பழைய நினைவுகளையும், தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் இருக்கிறார் கிரிக்கெட்டர் நடராஜனின் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here