தமிழகத்தை உலுக்கிய சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை – தொடரும் சோகக்கதை!!

0

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. மேலும் திரையுலகை சேர்ந்த பலரின் மரணம் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் சின்னத்திரை நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் பல வருடங்களாக நடந்து வருகிறது.

சின்னத்திரை கலைஞர்கள்

சில வருடங்களாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது. இதன் பின்னணி என்ன, அவர்களுக்கு அப்படி என்ன தான் நடக்கிறது இவ்வாறு பலவும் மர்மமாகவே உள்ளது. மேலும் இப்பொழுது சித்ராவின் இந்த தற்கொலையும் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏன் இப்படி பட்ட ஒரு முடிவை எடுக்க வேண்டும்?? என்று பலருக்கும் கேள்வியாக உள்ளது. அவரது வருங்கால கணவரான ஹேமந்த்தும் நல்லவர் இல்லை என்ற கருத்தும் பரவி வருகிறது. இந்நிலையில் சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை முடிவும் வந்துள்ளது.

இந்த நிகழ்வு முதன்முறை அல்ல. சீரியல் நடிகைகள் பலரும் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதே போல தான் 2006 ஆம் ஆண்டு சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.

இது பலரையும் அதிர்ச்சியாக்கியது. அவர் மட்டுமல்லாது, லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் காமெடி நடிகையாக கலக்கி வந்த சோபனா 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மேலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சின்னத்திரையிலும் நடிகராக இருந்த சாய்பிரசாந்த் தனது வீட்டிலேயே விஷம் அருந்தி உயிரிழந்தார்.

மேலும் பிரபல சீரியல் நடிகையான சபர்ணா மனஅழுத்தம் காரணமாக கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் சன்டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் நடித்து பிரபலமான ஸ்ரவானியும் தற்கொலை செய்துகொண்டார்.

டிக்டாக் மூலம் பழகிய நபர் பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்பொழுது சித்ராவின் இறப்பு. இவ்வாறு பல சின்னத்திரை நடிகர்கள் உயிரிழப்பது மர்மமான ஒன்றாகவே உள்ளது. இதனை இனிமேலும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் தவிர்க்க உரிய நடவடிக்கை ஏதேனும் எடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here