IPL 2024: இறுதிச்சுற்றுக்குள் நுழையப்போவது யார்??  ராஜஸ்தான் vs ஹைதராபாத் பலப்பரீட்சை!!  

0

2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 போட்டியில், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியுடன் மோத இருக்கிறது. இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் அணியை பொறுத்த வரையில், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மியர், என பேட்டிங்கில் சிறந்து விளங்கினாலும், பவுலிங்கில் தான் சற்று தடுமாற்றமாகவே உள்ளது. ஆனால், சுழற்பந்து வீச்சில் அஸ்வின் மற்றும் சாஹல்  எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை போல, ஹைதராபாத் அணியிலும், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி,ஹென்ரிச் கிளாசென் என அதிரடியான பேட்டிங்கும், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், டி நடராஜன் என பலமான பவுலிங்கும் கொண்டுள்ளது. இதனால், அசுர பலத்துடன் திகழக்கூடிய இரு அணிகளுக்கு நடைபெற இருக்கும் போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here