Wednesday, May 29, 2024

டோர் டெலிவரி மோசடி – இணையதளத்தில் வைரலாகும் வீடியோ!!

Must Read

அமெரிக்காவில் டோர் டெலிவரி செய்யும் ஒரு பெண் ஊழியர் உணவு டெலிவரி செய்தது போன்று போட்டோ ஆதாரம் எடுத்து விட்டு மீண்டும் அந்த உணவை திரும்ப எடுத்து சென்ற ஊழியர் கேமராவில் கையும் களவுமாக சிக்கினார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மோசடி செய்த டோர் டெலிவரி ஊழியர்:

கொரோனா தொற்று பரவும் காரணத்தினால் வீட்டிலிருந்து சமைப்பதற்கு சோம்பேறித்தனம்பட்டு சமைக்காமல் டோர் டெலிவரி செய்கிறார்கள். அதிலும், டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து நேரடியாக பொருட்களை கைகளில் வாங்கினால் ஆபத்து என முன்னெச்சரிக்கையாக அதனை தவிர்க்கும் வகையில் ஆப்ஷனை தேர்வு செய்கின்றனர். அதாவது வாடிக்கையாளர்கள் வீட்டின் வாசலில் உணவை வைத்துவிட்டு அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றை எடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு ஊழியர் சென்றுவிடுவார்கள், அதன் பிறகு வாடிக்கையாளர்கள் வந்து அந்த உணவை எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கு தொடர்பு இருக்காது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்காவில் டோர் டெலிவரி செய்யும் இது போன்ற நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர் உணவு பொருளை வாடிக்கையாளர் வீட்டின் முன் வைத்து விட்டு, பின்னர் அடையாளத்திற்காக அதனை புகைப்படம் எடுத்து கொள்கிறார். இதன் பின்னர் மீண்டும் வந்து அந்த உணவு பொருளை திரும்ப எடுத்து கொண்டு சென்று விடுகிறார். இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த காட்சியை சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்த வாடிக்கையாளர் டிக்டாக்கில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வெளி வந்து பலரும் பார்வையிட்டு உள்ளனர். டிக்டாக்கில் வெளியான இந்த பதிவை ஒரு கோடிக்கும் மேலானோர் பார்வையிட்டுள்ளனர். அந்த தனியார் நிறுவனம் கண்டிப்பாக அந்த ஊழியரை கண்டுபிடித்து வேலையை விட்டு நிறுத்திவிடுவோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -