சூப்பரான மதுரை மட்டன் மசாலா – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
mutton sukka
mutton sukka

அசைவ பிரியர்களுக்கு மட்டன் மிகவும் விருப்பமான உணவு ஆகும். மேலும் மட்டனில் தான் அதிக சத்துக்களும் அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இப்பொழுது முஸ்லீம் ஸ்டைலில் சுவையான ‘மட்டன் மசாலா’ எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Spicy-Mutton-Curry-Ingredients-300x175
Spicy-Mutton-Curry-Ingredients

மட்டன் – 1/2 கி

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

தயிர் – 1 கப்

நெய்

பட்டை

கிராம்பு

வெங்காயம்

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி

செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி அதில் தயிர், மஞ்சள்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்துகொள்ளவும். மேலும் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது குக்கரில் நெய்யை ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். அதன் பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

mutton gravy
mutton gravy

அதன் பின் ஊறவைத்துள்ள மட்டனை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவும். 4 விசில் வரும் வரை வைத்து விட்டு பரிமாறினால் சுவையான மட்டன் மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here