சாம்பிராணியால் தூபம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா?? ஆன்மீக விளக்கம்!!

0

நம் வீடுகளில் உள்ள தீய சக்திகளை விரட்ட சிறந்த வழிகளில் ஒன்று சாம்பிராணி தூபம் போடுவது. சாம்பிராணி போடுவதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விளக்குகின்றனர். மற்றும், அதிலிருந்து வரும் வாசனை மனதிற்கு அமைதியை கொடுக்கிறது. மேலும், சில பொருட்களை சம்பிராணியுடன் சேர்ப்பதன் மூலம் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

சாம்பிராணி தூபம் போட்டால் ஏற்படும் நன்மைகள்:

பொதுவாக, கிராமங்களில் வெள்ளி, செய்வாய் போன்ற நாட்களில் பெண்கள் தலை குளித்துவிட்டு வீட்டில் சாம்பிராணி போடுவார்கள். அது பார்ப்பதற்க்கே அழகாக இருக்கும். சாம்பிராணி போடுவது வாசனைக்காக மட்டும் அல்ல, அதில் பல்வேறு நன்மைகள் உள்ளது. சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகராக கூறப்படுகிறது.

ஹோமம் செய்வதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்குமோ அனைத்தும் சாம்பிராணி போட்டாலே கிடைக்கிறது. சாம்பிராணியால் தூபம் போடும் பொழுது கண்திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட்டால் வீட்டில் தெய்வ அருள் நிலைத்து இருக்கும்.

சாம்பிராணியில் அருகம்புல் போட்டு தூபமிட்டால் சகல தோஷங்கள் நீங்கும். எந்த காரியமும் நடக்கவில்லை என்று நினைப்பவர்கள் வெட்டிவேரை சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் போடும் பொழுது நினைத்த காரியம் நிறைவேறும். வேப்பிலையை காயவைத்து சாம்பிராணியுடன் தூபம் போட்டால் நோய்களில் இருந்து விடுபடலாம்.

பல வருடங்களாக பகை இருப்பவர்கள் வெண்கடுகு சேர்த்து தூபம் போட்டால் பகைமை விலகும். சாம்பிராணியில் ஜவ்வாது சேர்த்து தூபம் போட்டால் திடீர் அதிஷ்டம் உண்டாகும். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நம் வீட்டில் இருக்குமோ என்று நினைப்பவர்கள் வேப்பம்பட்டையை போட்டு சாம்பிராணி தூபமிட்டால் விலகிவிடும். காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் திருமணதடை நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here