தொடர்ந்து முன் வரிசையில் களமிறங்காத தோனி.. அப்டேட் கொடுத்த பயிற்சியாளர்.. முழு விவரம் உள்ளே!!

0

IPL தொடரின் 17வது சீசன் இறுதி கட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து முன் வரிசையில் களம் இறங்காததை கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.

TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!

அதனால்தான் போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதை தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். 9வது இடத்தில் தோனி களம் இறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here