18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

0

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்  விபத்து உள்ளான சில சம்பவங்களும் அரங்கேறியது.  இந்த நிலையில்  தான் இப்பொழுது போக்குவரத்து துறை  முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது.

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!!

அதாவது, 18 வயது நிரம்பாதவர்கள்  வாகனங்கள்  ஒட்டி  பிடிபட்டால் அந்த வண்டியின்  வாகன உரிமம்(ஆர்.சி) ரத்து செய்யப்படும் என்றும்  இந்த விதி ஜூன்  1 ஆம் தேதி முதல்  அமலுக்கு  வரும்  என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் வாகனத்தை  ஓட்டி  வரும் மைனருக்கு ரூ.25000 அபராதமும் 25 வயது வரை  ஓட்டுநர்  உரிமை  எடுக்க முடியாதவாறு  ரத்து செய்யப்படும் என்றும்  அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here