விராட் கோஹ்லியின் ஹோட்டலில் வேஷ்டிக்கு அனுமதி இல்லை., வருத்தமடைந்த பிரபலமான தமிழர்!!!

0
விராட் கோஹ்லியின் ஹோட்டலில் வேஷ்டிக்கு அனுமதி இல்லை., வருத்தமடைந்த பிரபலமான தமிழர்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விராட் கோஹ்லிக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். இவர் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில்  ‛One8 Commune’ என்ற பெயரில் ஹோட்டல் பிஸினஸும் நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் மும்பையில் உதயமான விராட் கோஹ்லி-யின் ஹோட்டலுக்கு தமிழகத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ராவண ராம் சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது வேஷ்டியுடன் சென்ற அவரை ஹோட்டல் பணியாளர்கள் சாப்பிட அனுமதிக்கவில்லை.இதனால் வருத்தமடைந்த ராவண ராம், “விராட் கோஹ்லியின் ஹோட்டலில் இப்படி நடந்தது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. புதிய வேஷ்டி தான் அணிந்து வந்துள்ளேன், ஆனாலும் டிரஸ்கோட் சரியில்லை என ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? எனவும் தெரியவில்லை.” என வீடியோ (கீழே உள்ளது) பதிவிட்டுள்ளார்.

மெட்ரோ பயணிகளுக்கு ஜாக்பாட்.., இந்த தேதியிலும் ரூ.5 தான் டிக்கெட்.., நிர்வாகம் அறிவிப்பு!!!

Enewz Tamil WhatsApp Channel 

 

View this post on Instagram

 

A post shared by Ramanathan Asokan (@raavanaa_ram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here